Wednesday, April 29, 2026 4:20 pm
ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் பட்லகல பகுதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளனதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
டயகமையில் இருந்து ஹட்டன் சென்ற பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றே விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

