Monday, November 16, 2026 4:09 pm
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ‘அக்வான்’ புயலாக உருவெடுத்து, வரும் நவம்பர் 20-ஆம் திகதி மிகத் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் வரும் நவம்பர் 18 , 19 ஆகிய திகதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று திங்கட்கிழமை ( 16) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, தற்போது சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே சுமார் 700 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று ‘அக்வான்’ (Akvan) புயலாக மாறவுள்ளது. பின்னர் இது மேலும் தீவிரமடைந்து, வரும் நவம்பர் 20-ஆம் திகதி ஆந்திர மாநிலம் நெல்லூர் , துனி இடையே மிகத் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

