Sunday, November 15, 2026 9:52 pm
பல்கலைக்கழக மாணவர்களின் பார்வைக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், ஜனாதிபதி நிதியத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 526 மாணவர்களுக்கு இலவசக் கண்ணாடிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை (நவம்பர் 14) பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தெரிவுச் செயல்முறையின் போது, 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, ஒரு மாத காலத்திற்குள் இலவசக் கண்ணாடிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு, ஐக்கிய இராச்சியத்தின் ‘ஸ்ட்ரவுட் ரோட்டரி கிளப்’ (Stroud Rotary Clஉப்) , ‘விஷ் ஃபவுண்டேஷன்’ (Wish Foundation) ஆகியன அனுசரணை வழங்குகின்றன.
இத்திட்டத்தின் முதற்கட்டமானது ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும், இரண்டாம் கட்டம் ரூஹுணு பல்கலைக்கழகத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரொஷான் கமகே, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் எம். பிரதீபன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் டி. வேல்நம்பி, பீடாதிபதிகள், பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கலந்துகொண்டனர்.

