Monday, November 16, 2026 1:53 pm
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா 2-வது முறையாக போட்டியின்றி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஐசிசி இயக்குநர்கள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று இந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்த ஜெய் ஷா, உலக கிரிக்கெட்டை வழிநடத்துவது தமக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றார். வரும் 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்படுவது விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் என்றும், இதன் மூலம் உலகளவில் புதிய ரசிகர்களை ஈர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பிசிசிஐ) செயலாளராகப் பணியாற்றியவர்.

