Monday, November 16, 2026 4:37 pm
உலகத் தலைவர்களைச் சந்திப்பதற்காகவும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்திப்பதற்காக குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார் ட்ரம்ப்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முத்தரப்புக் கூட்டத்தின் மையக்கருத்தாக அணு ஆயுத ஒழிப்பு இருக்கும் என்றாலும், தலைவர்கள் எந்தவொரு உறுதியான உடன்பாட்டையும் எட்டுவார்கள் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், இக்கூட்டத்தை அந்தப் பொருள் குறித்துப் பேசுவதற்கான ஒரு ஆரம்பகட்ட உரையாடலாகவே கருதுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகின் முன்னணி அணுசக்தி வல்லரசுகளுடன் நேருக்கு நேர் சந்திப்பு நடத்துவது குறித்து டிரம்ப் சில காலமாகவே சூசகமாகத் தெரிவித்து வந்தார். ஒக்டோபர் 19 ஆம் திகதி ஏபிசி நியூஸின் தலைமை வெள்ளை மாளிகை செய்தியாளர் மேரி புரூஸிடம் பேசிய ட்ரம்ப், தான் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது புட்டின் ஷி ஜின்பிங் ஆகியோரைச் சந்திக்க விரும்புவதாகவும், அணு ஆயுத ஒழிப்பு குறித்து விவாதிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். சீன உளவாளி எனக் கூறப்படும் ஒரு பெண்ணுடன், பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கிற்கு இருந்த தொடர்பு குறித்து நிர்வாகத்திற்கு என்ன தெரிந்திருந்தது என்பது பற்றிய கேள்விகள் நீடித்து வரும் வேளையில், ட்ரம்பின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
சீனாவில் நடைபெறும் ஏபெக் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, அமெரிக்கா, சீனா , ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் முதன்முறையாக நடத்தும் முத்தரப்புக் கூட்டத்தில் ட்ரம்ப் பங்கேற்பார் என்று மூத்த அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரான் போர் குறித்து ஷி ஜின்பிங் , ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த முத்தரப்புக் கூட்டத்தின் போது உக்ரைன் குறித்து விவாதிக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.