Wednesday, April 29, 2026 4:59 pm
திருச்செந்தூரில் முருகக் கடவுளை சாமி தரிசனம் செய்த தவெக தலைவர் விஜய் அடுத்ததாக இன்று சீரடிக்கு சென்று சாய் பாபாவை தரிசனம் செய்துள்ளார். விஜய் தனது நண்பர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து தனி விமானத்தில் இன்று சீரடிக்கு சென்று சாய் பாபாவை வணங்கியுள்ளார். சீரடி சாய் பாபா சன்னதியில் மண்டியிட்டு சாய் பாபாவை விஜய் வணங்கிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் செய்யப் போவதாக அறிவித்தார். ஆனால், அரசியலுக்கு உடல் நலக்குறைவு காரணமாக வரமுடியவில்லை. விஜய் என பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவரை பாஜகவை சேர்ந்த எச். ராஜா ஜோசப் விஜய் என அடையாளப்படுத்த, ஆம் நான் ஜோசப் விஜய் தான் என வெளிப்படையாக பேச ஆரம்பித்த விஜய் தற்போது அரசியல் களத்திற்கு வந்த பிறகு அனைத்து மதத்தினரையும் கவரும் விதமாக புதிய ஆன்மிக அரசியலை கையில் எடுத்துள்ளாரா? என கேள்விகள் கிளம்பியுள்ளன.
சீரடி சாய் பாபா கோயிலில் நீல நிற சட்டை அணிந்துக் கொண்டு நடிகரும் தவெக தலைவருமான விஜய் சாமி தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. வேட்டி, சட்டை அணிந்துக் கொண்டு சில தினங்களுக்கு முன்பாக திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசனம் செய்த காட்சிகள் வைரலாகின. இந்நிலையில், அடுத்ததாக விஜய் எந்த கோயிலுக்குச் செல்வார் என்றும் அனைத்து மதத்தினரையும் கவரும் வகையில் அவர் சர்ச் மற்றும் தர்காவுக்கு செல்லக்கூடும் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
சென்னையில் சாய் பாபாவுக்கு மிகப்பெரிய கோயிலை விஜய்யின் அம்மா கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
