Thursday, April 30, 2026 3:55 pm
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
போக்குவரத்துச் செலவுகளின் அதிகரிப்பே இவ்விலை உயர்விற்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பிற்கு அமைய, இதற்கு முன்னர் 220 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 225 ரூபாவாக அதிகரித்துள்ளது.

