Monday, November 16, 2026 2:30 pm
சீன அரசுக்கு சொந்தமான கோமாக் நிறுவனம், பேட்டரி தயாரிப்பு நிறுவனமானCATL , ஷாங்காய் ஜியாடோங் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கூட்டாளிகளுடன் இணைந்து இந்த விமானத்தை உருவாக்கியுள்ளது.
சுமார் 10 தொன் நிறை கொண்ட இந்த 19 இருக்கைகள் உள்ள மின்சார பயணிகள் விமானம், அதிகபட்சமாக 400 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்கக் கூடியது. சமீபத்தில் நடைபெற்ற சோதனையின்போது, விமானத்தில் இரு பைலட்டுகள் உள்பட மூன்று பேர் இடம்பெற்றிருந்தனர். விமானம் 16 நிமிடங்கள் , 38 வினாடிகள் வானில் பறந்து, 60.4 கி.மீ தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
வழக்கமான ஜெட் எஞ்சின்களுக்கு பதிலாக மின்சார விசிறி முக்கிவிசையை பயன்படுத்தும் இந்த விமானம் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறக்கவல்லது. பசுமை விமான போக்குவரத்தை நோக்கிய சீனாவின் இந்த முக்கிய நகர்வு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் மின்சார மற்றும் கலப்பின விமானங்களின் தயாரிப்பில் தீவிரம் காட்டி வரும் வேளையில், சீனாவின் இந்தச் சோதனை விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

