Friday, October 2, 2026 9:43 pm
கியூபாவிற்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற ஒரு பெரிய சரக்குக் கப்பலை இடைமறித்ததாக அமெரிக்க கடலோரக் காவல்படை அறிவித்துள்ளது .
கியூபா ,மெக்சிகோ ஆகியவற்றுக்கு இடையேயான கரீபியன் கடலில், அதிகாரிகளிடமிருந்து தப்பிக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தியபோது, கிரேஸ் என்ற கப்பல் செப்டம்பர் 5 ஆம் திகதி தடுத்து நிறுத்தப்பட்டதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. அந்தக் கப்பல் 91 மீற்றர் (300 அடி) நீளம் கொண்டது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“கிரேஸ் கப்பல் எரிபொருளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்ததுடன் , ‘டார்க் ஃப்ளீட்’ மத்தியில் பொதுவான தந்திரங்களைக் கையாண்டு வந்ததாக நம்பப்படுகிறது,” என்று கடலோரக் காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடலோரக் காவல் குழுவினர் கப்பலில் ஏறி, அதை மெக்சிகோவிற்குக் கொண்டு சென்றனர். அங்கு மெக்சிகோ கடற்படை ஆய்வுக் குழுவினர், “கப்பலின் நிலைப்படுத்தும் தொட்டிகளில் பெருமளவு எரிபொருள் இருப்பதை உறுதி செய்தனர்”. மேலும், சட்டவிரோத எரிபொருள் இருப்பதாக நம்பப்படும் பல கொள்கலன்களையும் அந்தக் கப்பல் ஏற்றிச் சென்றதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

