Thursday, October 1, 2026 4:55 pm
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ரான்மல் கொடிதுவக்கு ,பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) அசோக தர்மசேன உள்ளிட்ட பல பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களை தேசிய பொலிஸ் ஆணைக்குழு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் (IGP) கோரிக்கையைத் தொடர்ந்து, இன்று (அக்டோபர் 1) நடைபெற்ற கூட்டத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த முடிவை எடுத்தது.
இரத்து செய்யப்பட்ட இடமாற்றங்களில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் , பல பெண் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

