Friday, October 2, 2026 9:58 pm
ஆசிய விளையாட்டில் நடப்புச் சம்பியனான சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் ஹொக்கி அணி தங்கப் பதக்கம் வென்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கடைசியாகத் தங்கப் பதக்கம் வென்று 44 ஆண்டுகள் ஆகின்றன; இந்த வெற்றியின் மூலம் லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தையும் இந்திய மகளிச் ஹொக்கி அணி உறுதி செய்துள்ளது.
இந்தியாவின் லால்ரெம்சியாமி ஹ்மார்சோட் (Lalremsiami Hmarzote), முதல் கால்பகுதியின் 10-வது நிமிடத்தில் தனது அணிக்கான அந்த ஒரே கோலை அடித்தார்.
இதுவரை இந்தியா மொத்தம் 16 தங்கப் பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்திய அணியின் வீராங்கனைகளின் குடும்பத்தினர், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நடனமாடியும் இனிப்புகளைப் பரிமாறியும் கொண்டாடுவதை தொலைக்காட்சிச் செய்திகள் காட்டின.

