Wednesday, May 6, 2026 1:03 pm
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் முடிவை காங்கிரஸ் கட்சி உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறும் முயற்சியில் தவெக ஈடுபட்டுள்ளது.
இந்த ஆதரவிற்கு காங்கிரஸ் கட்சி ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அரசியல் நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க.வை ஆதரிப்பதன் மூலம் பல ஆண்டு காலமாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஆட்சி அமைக்க இன்னும் 11 பேரின் ஆதரவு தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

