Wednesday, May 6, 2026 1:27 pm
2025/2026 கல்வி ஆண்டுக்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்து கொள்ளும் நடவடிக்கைகள் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டதன் பின்னர், அனைத்து மாணவர் பதிவுப் பட்டியல்களையும் 2026 ஒகஸ்ட் 31-ஆம் திகதிக்குள் உரிய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2026 செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து கற்கைநெறிகளை ஆரம்பிக்கும் திகதிகள், அந்தந்தப் பல்கலைக்கழகங்களினால் தீர்மானிக்கப்படும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

