Tuesday, November 24, 2026 3:15 pm
பெண் கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்த புகார் தற்போது சூடு பிடித்திருக்கிறது. இதுவரை பெண் கலெக்டர் புகார் அளிக்கவில்லை என கூறி வந்த நிலையில் இன்று காலை முதல் கலெக்டர் ஏற்கனவே புகாரளித்துள்ளார் என்கிற செய்தி வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக பெண் கலெக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸ் இன்று காலை நீதிமன்றத்தில் உறுதி செய்தது. இந்நிலையில், பெண் ஆட்சியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் சாயலுடைய கருத்து தெரிவித்தல், பாலியல் வற்புறுத்தல், பெண்ணை பின் தொடர்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

