Tuesday, November 24, 2026 3:16 pm
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத் தூணில் திருக்கார்த்திகை நாளான இன்று விளக்கேற்றலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இருந்து பாஜ நிர்வாகிகள், தொண்டர்களுடன் திரண்டு சென்று, திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார்.
அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) காலை திருநெல்வேலியில் உள்ள நயினார் நாகேந்திரனை வீட்டு காவலில் வைத்தனர். அவரது வீட்டைச் சுற்றிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக, ஹிந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த 480 பேர் அவரவர் வீடுகளிலேயே காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் செல்ல அனுமதி இல்லை என அன்னூரில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் முருகன் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். பிறகு எல்.முருகனை வீட்டுக்காவலில் வைப்பதாக கூறி, கோவை பொலிஸார் மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

