Tuesday, November 24, 2026 9:50 pm
இந்தியப் பெருங்கடலில், மொரிஷியஸ்-ரியூனியன் பிராந்தியத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) அன்று 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைக்கு சுனாமி அபாயம் ஏதுமில்லை என்று இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலநடுக்கம் மாலை 4:36 மணிக்கு, 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது தெற்கு அட்சரேகை 17.78° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 65.82° ஆகிய ஆரம்ப ஆயத்தொலைவுகளில் (coordinates) பதிவாகியுள்ளது. இலங்கையின் கடற்கரையோரப் பகுதிகளிலும், அதற்கு அருகிலும் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

