Friday, October 2, 2026 10:42 pm
போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் ஒரு வருடத்தில் 9,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 8 முதல் 21 வயதுக்குட்பட்ட 9,105 குழந்தைகளும், இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 8,932 பேர் ஆண் இளைஞர்கள் என்றும், 173 பேர் இளம் பெண்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டவர்களில், 8 முதல் 14 வயதுக்குட்பட்ட 11 குழந்தைகளும் அடங்குவர் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

