Wednesday, April 29, 2026 7:54 pm
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என்று பல்வேறு எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 3வது இடத்தைப் பிடிக்கவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல் நடந்த தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்காளர்களிடம் வாக்குப் பதிவுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்த முடிவுகளை வைத்து தற்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஊடகமும் நடத்திய இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ் எக்ஸிட் போல்
திமுக – 125 – 145
அதிமுக – 65 – 80
தவெக – 18 – 24
மற்றவை 2-6
ரிபப்ளிக் டிவி பி மார்க்:
திமுக – 124 -145
அதிமுக 65 – 85
தவெக – 16 – 26
மற்றவை – 1 – 6
சத்தா பஜார் எக்ஸிட் போல்
திமுக – 145 – 155
அதிமுக – 45 -65
தவெக – 7 – 9
ரிபப்ளிக் டிவி மாட்ரிஸ்:
திமுக – 122 – 132,
அதிமுக – 87 – 110,
தவெக – 10 – 12,
மற்வை – 0 -6
ஜேவிசி எக்ஸிட் போல்: அதிமுக 128 –
147, திமுக 75 -85,
தவெக – 8 – 15

