Thursday, April 30, 2026 5:33 am
வாக்குப் பதிவுக்குப் பிந்திய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக வெற்றியை எதிர்வு கூறினாலும் “Axis My India” நடாத்திய கருத்துக் கணிப்பு, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 98 முதல் 120 வரையிலான இடங்கள் கிடைக்கும் என்கிறது.
மேலும் திமுக 92 – 110 இடங்களையும். அதிமுக 22-32 இடங்களையும் பெறும் என்கிறது இந்த கருத்துக் கணிப்பு. மேலும் 37 வீதமான வாக்காளர்கள் விஜயை முதல்வராகவம், 35 வீதமானவர்கள் மு.க. ஸ்டாலினை முதல்வராக வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வாக்குப் பதிவு முடிந்து வரும் மக்களிடம் எடுக்கப்படும் கருத்து கணிப்புகள் பலித்ததும் உண்டு. பிழைத்ததும் உண்டு.

