Wednesday, July 1, 2026 8:43 pm
பாகிஸ்தான், கட்டார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் டோஹாவில் புதன்கிழமை ஈரான் , அமெரிக்க ஆகிய நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையேயான மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், அதனை “மிகச் சிறந்த சந்திப்புகள்” நடந்த நாள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தற்போதைய நிலவரப்படி, ஈரானின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை சிறப்பாக முன்னேறி வருகிறது,” என்று ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறினார். “அவர்கள் மிகவும் நல்ல சந்திப்புகளை நடத்தியுள்ளனர், பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

