Wednesday, July 1, 2026 8:50 pm
ஈரான், ஈராக் ,லெபனான் ஆகிய நாடுகளின் வான்வெளியைத் தொடர்ந்து தவிர்க்குமாறும், மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளில் பறக்கும்போது “கவனமாக இருக்குமாறும்” ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு முகமை விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“நீண்ட கால அடிப்படையில் [அமெரிக்க-ஈரான்] போர் நிறுத்தம் நீடிப்பது நிச்சயமற்றதாக உள்ளதுடன், பதற்றம் விரைவாக அதிகரிக்க வாய்ப்புள்ளது” என ஈஏஎஸ்ஏ எச்சரித்துள்ளது.
தனது செய்திக்குறிப்பில் , முன்னதாக ஜூலை 1 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்த தனது பரிந்துரையை, ஜூலை 8 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக ஈஏஎஸ்ஏ தெரிவித்துள்ளது.

