Monday, November 16, 2026 2:28 pm
பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக அவரது மனைவி டெய்சி அறிவித்துள்ளார். இதன் மூலம 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், இருவரும் ஒருமனதாக பிரிவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். டெய்சி லொட்டரி அதிபர் மார்ட்டின்- லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் தம்பதியின் மகளாவார். ஆதவ்வும், டெய்சியும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. தற்போது பிரித்து வாழ்வதாக அறிவித்ததன் மூலம் இவர்களது 14 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது தானும் ஆதவ்வும் தனித்தனியாக பயணிக்க பரஸ்பரம் முடிவு செய்துள்ளதாகவும் டெய்சி அறிவித்துள்ளார். மேலும் ஆதவ் மீது தனக்கு எப்போதும் மரியாதை உண்டு என்றும் அவர் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர வேண்டும் என்றும் டெய்சி தெரிவித்துள்ளார்.

