Friday, October 2, 2026 10:21 pm
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராச அனோஜனை விடுவிப்பதற்கு அரச தலையீட்டை கோரி, ராமன்ன மகா நிகாய , அமரபுர மகா நிகாய ஆகியவற்றின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
செப்டம்பர் 30 அன்று ஜனாதிபதி செயலகத்தில், கௌரவ ஓமல்பே சோபித தேரரால் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவிடம் இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.
அதேவேளை, இந்து மத குருக்கள் சங்கமும் , அகில இலங்கை இந்து கலாசார பேரவை ஆகியவற்றின் தலைவரான சிவஸ்ரீ கே. வி. கே. வைத்தீஸ்வர குருக்களும் இந்து சமூகத்தின் சார்பில் மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

