Wednesday, September 30, 2026 12:14 pm
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான விவகாரம் ஒன்றில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மேற்கொண்ட பரிந்துரையை இரத்து செய்யக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மேலதிக நடவடிக்கைகளுக்காக இவ்விவகாரத்தை பரிந்துரைத்த கோட்டை நீதவானின் முடிவை இந்த மனு எதிர்த்திருந்தது.
இன்று புதன்கிழமை (30) நடைபெற்ற விசாரணையின்போது மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தது.

