Wednesday, September 30, 2026 4:03 pm
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாதம் போரை துவங்கின. ஆனால் தற்போது வரை போர் நின்ற பாடில்லை. அமெரிக்காவின் மிரட்டலை ஈரானும் ஏற்கவில்லை. இந்த போரில் அமெரிக்கா பல ஆயிரம் கோடிகளை செலவு செய்துவிட்டது.
ஒருபக்கம் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் அமெரிக்கா அந்த நாட்டின் மீது எந்த போரையும் தொடங்கவில்லை. இந்நிலையில் ‘ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றால் வடகொரியா மட்டும் வைத்திருக்கலாமா?’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் சொன்ன ட்ரம்ப் ‘ வட கொரியாஜனாதிபதி கிம் ஜோங் உன் எனது நண்பர். அவருக்கு உலகத்திலேயே பிடித்த ஒரே நபர் நான் மட்டும்தான். வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை கையாளும் திறன் இருந்தாலும் அமெரிக்காவை விட பெரிய அணு ஆயுதத்திறன் அவர்களிடம் இல்லை. வடகொரியாவின் அணு ஆயுத சேமிப்பை எனக்கு முன்பிருந்த அமெரிக்க ஜனாதிபதிகள் யாரும் தடுக்கவில்லை. கிம் என்னை மிகவும் மதிப்பதால் நான் இருக்கும் வரை அவர் நன்றாக இருப்பார்’ என ட்ரம்ப் ஜாலியாக பதிலளித்தார்.

