Friday, October 2, 2026 10:06 pm
முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியைப் பரிசோதித்த மருத்துவக் குழுவில் பணியாற்றிய 10 மருத்துவர்களுக்கு, அக்டோபர் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு மனுவின் மூலம் சமர்ப்பித்த கோரிக்கைகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு நீதவான் பாசன் அமரசேன இந்த அழைப்பாணைகளை அனுப்பினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சாலி, தற்போது கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சாலிக்கு இதயம் பெரிதாகியுள்ளது என்றும், அவரது நிலையைச் சமாளிக்க ஒரு கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமீபத்தில் தெரியவந்தது.அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 மருத்துவர்களும் அக்டோபர் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

