Friday, June 5, 2026 11:24 am
இலங்கையின் இளம் ஈட்டி எறிதல் நட்சத்திரமான ருமேஷ் தரங்க பதிரண ((Rumesh Tharanga Pathira) , இத்தாலியின் ரோம் நகரில் நேற்று (04) இரவு நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் பருவத்தில் , உலக அளவில் பதிவு செய்யப்பட்ட மிகச் சிறந்த ஈட்டி எறிதல் தூரமாக இது பதிவாகியுள்ளது.
இலங்கையின் ஈட்டி எறிதல் வரலாற்றில் புதிய தேசிய சாதனையாக இது மாறியுள்ளது. ஆசிய தடகள வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 2 ஆவது மிகச் சிறந்த ஈட்டி எறிதல் தூரமாக இவரது இந்த 92.62 மீற்றர் தூரம் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ளது.

