Friday, June 5, 2026 10:36 am
எழுச்சிப் பாடலைப் பாடிய குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞரை நேற்று (04) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

