Thursday, March 5, 2026 4:37 pm
அஜர்பைஜான் விமான நிலையத்தை ஈரானிய ட்ரோன் தாக்கியுள்ளது. ஈரான் எல்லையை ஒட்டியுள்ள அஜர்பைஜான் எக்ஸ்க்ளேவ் நக்சிவானில் உள்ள விமான நிலைய முனையக் கட்டிடத்தை ட்ரோன் தாக்கியதாகவும், வளாகத்தின் ஒரு பகுதியை சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்ததாகவும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலை அருகே இரண்டாவது ட்ரோன் விழுந்தது என்றும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

