Thursday, November 5, 2026 7:30 pm
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 208 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பல்வேறு குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1,500 பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழல் ,தகுதியற்ற அதிகாரிகள் பொலிஸ் துறையில்இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், அவர்களைக் கண்டறிந்து நீக்குவதற்கும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

