Wednesday, November 4, 2026 10:51 am
அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. குடியரசுக் கட்சியிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இந்த முடிவு ஜனாதிஅப்தி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஒரு பெரும் அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தல் முடிவின்படி, பாராளுமன்றத்தின் கீழவையை ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்படுத்தவுள்ளனர். இது, டிரம்ப்பின் அதிபர் பதவிக்காலத்தின் எஞ்சிய இரண்டு ஆண்டுகளில் அவர் முன்னெடுக்க விரும்பும் சட்டத் திட்டங்களுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
செனட் சபையிலும் ஜனநாயகக் கட்சியினர் முன்னேற்றம் கண்டுள்ளனர்; குடியரசுக் கட்சியின் வசம் இருந்த இரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இருப்பினும், மேல்சபையில் பெரும்பான்மையைப் பெற அவர்களுக்கு மொத்தம் நான்கு இடங்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தேர்தல் முடிவு ஜனநாயகக் கட்சிக்குக் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தேடித்தந்துள்ளது.

