Tuesday, November 3, 2026 7:46 pm
பழங்கால டைனோசர் எலும்புகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், புதைபடிவமாக மாறிய சிவப்பு இரத்த செல்கள் எனத் தோன்றுபவற்றையும், அந்த மிருகத்தின் இரத்தத்திற்கு அதன் தனித்துவமான அடர் சிவப்பு நிறத்தை வழங்கும் மூலக்கூறின் தடயங்களையும் கண்டறிந்துள்ளனர்.
115 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய வடகிழக்கு பிறேஸிலில் வாழ்ந்து மடிந்த, அரடாசரஸ் எனப்படும் ஒரு சிறிய, மாமிச உண்ணி டைனோசரின் பின்னங்கால் எலும்புகளை ஆய்வு செய்த பின்னர், ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர்.
டைனோசர் எலும்புகளின் எலக்ட்ரான் நுண்ணோக்கிப் படங்கள், ஒரு காலத்தில் இரத்த நாளங்கள் ஓடிய மெல்லிய கால்வாய்களில், சிவப்பு இரத்த செல்களை ஒத்த சிறிய, வட்ட வடிவ அமைப்புகளை வெளிப்படுத்தின. அதே நேரத்தில், வேதியியல் சோதனைகள், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடல் முழுவதும் ஒக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவும் கரிமச் சேர்மமான ஹீமின் இருப்பைக் கண்டறிந்தன.
இத்தகைய கூற்றுகள் சர்ச்சைக்குரியவை, ஏனெனில் உயிரியல் திசுக்களும் மூலக்கூறுகளும் வேகமாகச் சிதைந்து, பழங்காலப் புதைபடிவங்களில் சிறிதளவோ அல்லது எந்தத் தடயமுமோ விட்டுச்செல்லக்கூடும். ஆனால், அவை உறுதி செய்யப்பட்டால், அது விஞ்ஞானிகளுக்கு முற்றிலும் புதிய வழிகளைத் திறந்து, டைனோசர்களின் இரத்தம், வளர்சிதை மாற்றம் மற்றும் அவற்றின் செயல்பாட்டு நிலைகள் ஆகியவற்றை ஆராய அவர்களுக்கு வழிவகுக்கும்.

