Sunday, November 15, 2026 8:36 am
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடல் கண்ணிவெடிகளில் மோதியதில், விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் இராணுவத்தின் கடற்படை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல்கள், தங்கள் வழிசெலுத்தல், அடையாளம் காணுதல் ,கண்காணிப்பு அமைப்புகளை அணைத்துவிட்டு, நீரிணைக்கு கிழக்கே உள்ள “பாதுகாப்பற்ற,தடைசெய்யப்பட்ட” பகுதி வழியாக எச்சரிக்கைகளைப் புறக்கணித்துச் சென்றதாக, இராணுவத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
வெடிவிபத்தைத் தொடர்ந்து கப்பல்களில் ஒன்று நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்த கடற்படை, “தடைசெய்யப்பட்ட” பகுதிகளில் நுழைய முயற்சிக்கும் இத்தகைய “விதிமீறல்” கப்பல்களுக்கு, வெடிவிபத்துகளும் தீப்பிடித்து எரிவதுமே காத்திருக்கும் முடிவு என்று எச்சரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (Islamic Revolution Guard Corps) கடற்படையினரும், “அனுமதியற்ற” பாதை வழியாக ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள், கடல் கண்ணிவெடிகளில் மோதி வெடித்ததாகவும் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

