Wednesday, September 30, 2026 8:44 pm
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி, அக்டோபர் 6ம் திகதி தேர்தல் ஆணையத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாகச் செல்வார்கள் என்று இண்தியா கூட்டணியின் ஆலோசனைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இண்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இண்தியா கூட்டணியின் இந்தக் கூட்டத்தை திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

