Thursday, October 1, 2026 4:44 pm
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தலைமையிலான தாக்குதல் காசாவில் போரைத் தூண்டியதாலும், மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட கடல்வழிப் போக்குவரத்து இடையூறுகளாலும், சூயஸ் கால்வாய் ஒட்டுமொத்தமாக 20 பில்லியன் டொலர் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது என்று எகிப்திய ஜனாதிபதி அப்தெல்-ஃபத்தா அல்-சிஸ்ஸி கூறுகிறார்.
செவ்வாயன்று அமைச்சரவை உறுப்பினர்கள், உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் ஆளுநர்களுடன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு சந்திப்பின்போது, உணவு மற்றும் எரிசக்தி விலைகள் உயர்வதற்கு வழிவகுத்த நிலையற்ற புவிசார் அரசியல் சூழ்நிலையே, அரசாங்கத்தின் இறுக்கமான வரவுசெலவுத் திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் குறைவான செலவினங்களுக்குக் காரணம் என்று எல்-சிஸ்ஸி குற்றம் சாட்டி
காசாவில் போர் தொடங்கிய பிறகு, ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சூயஸ் கால்வாய் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைத் தாக்கத் தொடங்கியதால், போக்குவரத்து கணிசமாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிருந்து, போக்குவரத்து போருக்கு முந்தைய நிலைகளை விட 60% முதல் 70% வரை குறைவாகவே இருந்து வருகிறது என்று ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜூலை மாத அறிக்கை தெரிவிக்கிறது.

