Sunday, November 15, 2026 8:53 am
லாக்ஃப்ஸ் காஸ் பயன்படுத்தும் உணவகங்கள் தயாரிக்கும் சிற்றுண்டிகள்,பிரபலமான உணவுவகைகள் ஆகியவற்றின் விலை உயரும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. லாக்ஃப்ஸ் காஸ் விலை உயர்வே இதற்குக் காரணம் ர்னத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலை திருத்தம் குறித்துப் பேசிய சங்கத் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன், அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில், லாக்ஃப்ஸ் காஸை நம்பியுள்ள பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் சிற்றுண்டிகளின் விலையை ரூ. 5-ம், ஃபிரைடு ரைஸ் , கொத்து ஆகியவற்றின் விலையை தலா ரூ. 15-ம் உயர்த்தும் என்று தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், லாக்ஃப்ஸ் நிறுவனம் தனது கட்டணங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தைச் சார்ந்த உணவக உரிமையாளர்கள் இந்த விலை மாற்றத்தைச் செய்துள்ளனர். திருத்தப்பட்ட விலை அமைப்பின்படி, 12.5 கிலோ வீட்டு உபயோக லாக்ஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,775 உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 732 அதிகரித்துள்ளது.

