Thursday, June 25, 2026 10:09 pm
வட ஜப்பானுக்கு அப்பால் புதன்கிழமை காலை 7:30 மணிக்கு (2230 GMT) ஹொன்ஷுவின் பிரதான தீவில் உள்ள இவாடே மாகாணத்திற்கு அப்பால் கடலில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள், பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள டோக்கியோவிலும் உணரப்பட்டன.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 6.9 என்று கூறியது, ஆனால் பின்னர் அதை 7.2 எனத் திருத்தியதுடன், அதன் மையப்புள்ளி 44 கிலோமீற்றர் ஆழத்தில் இருந்ததாகவும் தெரிவித்தது.
இந்த நில நடுக்கத்தால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

