Tuesday, June 2, 2026 1:10 pm
கைப்பந்து (Volleyball), கெரம் மற்றும் ஹொக்கி ஆகிய மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவற்றின் நிர்வாகப் பொறுப்புகள் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டுச் சங்கங்களின் யாப்புகளைத் திருத்துதல், வருடாந்த பொதுக்கூட்டங்களை நடத்துதல் மற்றும் புதிய நிர்வாகிகளைத் தேர்தல் மூலம் தெரிவு செய்வதற்கான செயல்முறைகளை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பதே இந்த முடிவின் நோக்கமாகும்.
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட சங்கங்களின் அனைத்து நிர்வாக மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளையும் அமைச்சின் செயலாளர் முன்னெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

