Tuesday, September 22, 2026 1:27 pm
இங்கிலாந்தில் வழக்கறிஞர் வேலையை விட்டுவிட்டு நாய்களை நடை பயிற்சி கூட்டி செல்லும் வேலையை முழு நேரமாக செய்து ஒரு பெண் தினமும் இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபா அளவுக்கு சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது..
வழக்கறிஞர் தொழிலில் இருந்த லிஸ் என்கிற பெண் மனஅழுத்தம் காரணமாக அதை விட்டுவிட்டு ஒரு அமைதியான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவர் முடிவு செய்தார். அப்போதுதான் அவருக்கு இந்த ஐடியா வந்திருக்கிறது.
தினமும் 20 முதல் 30 நாய்களை வாக்கிங் கூட்டிச் செல்லும் லிஸ் ஒரு நாய்க்கு ஒரு மணி நேரத்திற்கு 1800 ரூபா கட்டணமாக வசூலிக்கிறார். இதன் மூலம் அவரின் தினசரி வருமானம் சுமார் இந்திய மதிப்பில் 38,500 ரூபா, ரூ.51,400 ரூபா வரை அவர் சம்பாதிக்கிறாராம்.

