Wednesday, September 23, 2026 2:08 pm
‘ஹரக் கட்டா’, ‘கேஹல்பத்தார பத்மே’ ஆகியோருக்கு இடையிலான மோதல் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
‘ஹரக் கட்டா’ (Harak Kata) என்று அழைக்கப்படும் நாதுன் சிந்தக விக்ரமரத்ன மற்றும் ‘கேஹல்பத்தார பத்மே’ (Kehelbaddara Padme) என்று அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட விசாரணையைத் தொடங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களும் நேற்று (22) மாலை ஒருவரை ஒருவர் தாக்கியதாகவும், காயமடைந்த ‘கேஹல்பத்தார பத்மே’, தற்போது வெலிசர சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

