Tuesday, September 22, 2026 6:45 pm
சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன்,ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடியதாகவும் அப்போது, வளைகுடாப் பகுதியின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் முக்கிய நீர்வழிகளைத் திறந்து வைப்பதன் அவசியம் குறித்து அவர்கள் விவாதித்ததாக கிரெம்ளின் கூறியது.
மத்திய கிழக்கின் நிலைமை குறித்து இரு தலைவர்களும் விரிவான கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டதாகவும், அரசியல் மற்றும் இராஜதந்திரத் தீர்வு மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே சாத்தியமான வழி என்பதை வலியுறுத்தியதாகவும் அது கூறியது.
ஏமனில் மோசமடைந்து வரும் இராணுவ , அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், அங்கு “போர் நடவடிக்கைகளை விரைவாக நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும்” அவர்கள் வலியுறுத்தினர்.
“பாப் அல்-மண்டேப் , ஹோர்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட பிராந்தியத்தின் சர்வதேச நீர்வழிகள் வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் செல்வதை உறுதி செய்வதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது,” என கிரெம்ளின் கூறியது.

