Wednesday, September 23, 2026 2:02 pm
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரா, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் பணியாற்றியபோதும், ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றியபோதும், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக பண்டாரா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

