Tuesday, June 2, 2026 2:36 pm
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமீப காலமாக கட்சியின் மாநிலத் தலைமை மீது மிகுந்த அதிருப்தியில் இருந்து வருவதாகப் பேசப்பட்டு வந்தது. அதற்கேற்றாற்போல அண்ணாமலையும் சற்றே கட்சியிடமிருந்து விலகியே காணப்பட்டார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் தமிழ்நாடு பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடிதம் அளித்திருந்தார், அண்ணாமலை. அவர் கட்சி தொடங்கப் போவதாக அரசியல் அரங்கில் பரபரக்கப்பட்டு வரும் சூழலில், நேற்றைய தினம், `இன்னும் இரு தினங்களில் முடிவை அறிவிப்பேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், அண்ணாமலை தற்போது பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைசந்தித்து பாஜக-விலிருந்து விலகும் கடிதத்தைக்கொடுத்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

