Friday, August 7, 2026 3:20 pm
யாழ்ப்பாணம் சிறைச்சாலையைச் சூழ பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு சிறைச்சாலைக்குள் இருந்த தேவையற்ற இரும்புப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டுவதையும் காணமுடிந்தது.
தெற்கில் இடம்பெற்ற சிறைச்சாலைக் கலவரங்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இரும்பு பொருட்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.
நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதை தொடர்ந்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஒன்றுகூடி விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


