Friday, August 7, 2026 7:49 pm
தமிழக முதல்வர் விஜயின் மனைவி சங்கீதா தனது கணவர் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் சமயமாதலால் அந்தச் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது.
தவெக ஆட்சிக்கு வந்து விஜய் முதலமைச்சராகவிட்ட நிலையில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று லண்டனில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த வழக்கில் ஆஜரான சங்கீதா மனுவை வாபஸ் பெறுவதாக நீதிபதியிடம் தெரிவித்தார். சங்கீதாவின் முடிவுக்கு விஜய் தரப்பு ஆட்சேபனை தெரிவித்ததால் இந்த விவாகரத்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

