Tuesday, September 22, 2026 1:00 pm
2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றி கழகம் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டுவிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் மாறிவிட்டார். முதலமைச்சர் விஜய்க்கு ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்கிற ஜோதிடர் நிறைய ஆலோசனைகளை சொல்வதாக சொல்லப்படுகிறது. அந்த ஜோதிடருக்கு அரசு ஆலோசகர் பதவியும் கொடுக்க விஜய் தயாரானார். ஆனால் நிறைய அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் விஜய் அதை கைவிட்டார்..
அந்த ஜோதிடர் சொன்னதை கேட்டுத்தான் விஜய் கறுப்பு நிற கோட் அணிவதாகவும், நெற்றியில் கறுப்பு நிற பொட்டு அணிந்திருப்பதாகவும் தேர்தலுக்கு முன்பு மசூதி, தேவாலயம், திருச்செந்தூர் ,சாய்பாபா கோவிலுக்கெல்லாம் சென்று அவர் வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது கூட அது ஜோசியர் சொன்னதை கேட்டுத்தான் என சிலர் பேசுகிறார்கள். இந்நிலையில் நேற்று நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘ஜெயிலுக்குள் ஏன் முதல்வர் விஜய் போனார்னு யாருக்குமே தெரியல. ஜெயில்ல உங்களுக்கு கண்டம் இருக்கு போய் கை நெனச்சிட்டு வாங்கன்னு யாரோ ஒரு ஜோசியர் சொல்லியிருக்காரு. அதனால கருப்பு கோடி போட்டுக்கோங்க.கறுப்பு பொட்டு வச்சுக்கோங்கன்னு அந்த ஜோசியர் சொல்லியிருக்காரு. பேசாம அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கியிருக்கலாம்’ என நக்கலடித்திருக்கிறார்.

