Thursday, October 1, 2026 4:29 pm
டீசலுக்கான நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை (1) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்த விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் தமது தரப்பினரே ஏற்றுக் கொள்ளவுள்ளதாகவும் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளதார்.அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய டீசல் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆனால் டீசல் விலை இதைவிட அதிகளவிலேயே அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.எது எப்படி இருப்பினும், கடந்த அமைச்சரவை அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியத்திற்காகப் பல கோடிகளை ஒதுக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு உத்தியாகவே கையாளப்பட்டுள்ளது.
தற்போது பணவீக்கம் 8.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது இந்த 10 ரூபாய் அதிகரிப்பு செய்யப்பட்டாலும், தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க நாங்கள் தயாராக இல்லை என்பதனை மிகத் தெளிவாகக் கூற விரும்புகின்றேன்.
தனியார் பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட மாட்டாது. நாங்கள் ஒரு குறிப்பிட்ட பொறிமுறைக்குள் இருக்கிறோம், எனவே கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம் என்றார்.

