Tuesday, September 29, 2026 4:27 pm
சமூக ஆர்வலர்களான லலித் குமார் வீரராஜ் ,குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். இன்றைய சாட்சியப் பதிவு நிறைவடைந்த நிலையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நவம்பர் 27-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
சாட்சியம் அளிப்பதற்காக நவம்பர் 27-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் ராஜபக்ஷவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

