Friday, January 30, 2026 8:42 pm
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான பி.டி.உஷாவின் கணவர் வி.சீனிவாசன் இன்று காலை காலமானார். திக்கோடி பெருமாள்புரத்தில் உள்ள அவரது வீட்டில் சீனிவாசன் அதிகாலை 1:00 மணியளவில் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை, மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறினர். பி.டி. உஷா நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள டில்லிக்குச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பி.டி. உஷாவின் கணவர் வி. சீனிவாசனுக்கு 67 வயது. அவர் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் (CISF) துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவர் தூரத்து உறவினரான பி.டி.உஷாவை 1991 ஆம் ஆண்டு மணந்தார். ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

