Wednesday, May 6, 2026 2:06 pm
பரபரப்பான அரசியல் சூழலில் ரஜினிகாந்த் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பேசியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. இது திமுகவினருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள். இன்று காலை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து பேசினார் தற்போது ரஜினிகாந்த், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார். “வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழலிலும் நான் உங்களுடன் இருப்பேன்” என ஸ்டாலினிடம் ரஜினி கூறியதாக சொல்லப்படுகிறது.

